அரிசி உணவுகளை புல் கட்டு கட்டினேன் - குண்டான ரகசியத்தை கூறும் அனுஷ்கா!

Bookmark and Share

அரிசி உணவுகளை புல் கட்டு கட்டினேன் - குண்டான ரகசியத்தை கூறும் அனுஷ்கா!

நடிகர்கள் தான் கதாபாத்திரங்களுக்கேற்ப உடல் எடையை அதிகப்படுத்துவது, குறைப்பது போன்ற விஷயங்களில் இறங்குவார்கள். கதாநாயகிகளைப் பொறுத்தவரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருந்துவருகின்றனர்.

ஆனால் இந்த விஷயத்தில் அனுஷ்கா மாறுபட்டவர். காரணம் இவர் ஹீரோக்களை மாதிரிதான் படத்துக்குப்படம் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை குறைத்து அடுத்து படத்திற்கு எடையை அதிகப்படுத்துவார்.

அந்த வகையில், பாகுபலி படத்தின் முதல் பாகத்திற்காக எடையை அதிகப்படுத்தி அதன் இரண்டாம் பாகத்திற்காக எடைய குறைத்துள்ளார். மேலும் தற்போது ஆர்யாவுடன் நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தில் முதல் பாதியில் குண்டாகவும், இரண்டாவது பாதியில் ஸ்லிம்மாகவும் நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”இஞ்சி இடுப்பழகி படத்திற்காக நான் உடல் எடையை நிஜமாலுமே அதிகப்படுத்தினேன். அதன்காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக நான் சாப்பிடாமல் இருந்த அரிசி உணவுகளை புல் கட்டு கட்டினேன். தினமும் மூன்று வேளையும் ருசியான அரிசி சாப்பாடு சாப்பிட்டேன். நிம்மதியான தூக்கம் போட்டேன்.

இதுதான் எனது உடல் பெருத்த ரகசியம். அப்படி பெருத்த என் உடம்புக்கு மேல் இன்னும் என்னை குண்டாக காட்டக்கூடிய டிரஸ் அணிந்து நடித்தேன். ஆனால் தண்ணீர் டியூப்பெல்லாம் கட்டி நடிக்கவில்லை” என்று மறுத்துள்ளார்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions