கண்ணாடி அணியும் ஆண்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது: அனுஷ்கா பேட்டி

Bookmark and Share

கண்ணாடி அணியும் ஆண்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது: அனுஷ்கா பேட்டி

நடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘ஒருவர் கண்ணை பார்த்து அவர் எந்த மாதிரி ஆண் என்று கணிக்க முடியும். கண்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

அதுபோல் முகபாவம், பேச்சு, உடல் மொழிகளை வைத்தும் ஒருவரை எடை போடலாம். சிரிப்பும் ஒருவரின் தரத்தை வெளிப்படுத்தும். நான் ஆண்களின் கண்களைத்தான் முதலில் பார்ப்பேன்.

நல்ல மனிதர் என்றால் பார்வையில் நேர்மை தெரியும். நேர்மையான ஆண்களை எனக்கு பிடிக்கும். அவர்களிடம் பேசி பழகுவேன். சில ஆண்கள் கண்ணாடி அணிந்து கண்களை மறைத்து விடுகின்றனர்.

அவர்கள் தங்கள் குணாதிசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கிறார்கள். எனக்கு கண்ணாடி அணியும் ஆண்களை சுத்தமாக பிடிக்காது. அவர்களை விட்டு விலகி சென்று விடுவேன்.

சிரிப்பும் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிய வைக்கும். ஒளிவு மறைவு இல்லாமல் சிரிக்கும் ஆண்களை எனக்கு பிடிக்கும். அவர்களிடம் கள்ளம் கபடம் இருக்காது. அத்துடன் எளிமையாக இருக்கும் ஆண்களையும் விரும்புவேன். என்னை சுற்றிலும் நேர்மையானவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள்தான் என்னோடு இருக்கிறார்கள்.

சிறந்த முழுமையான மனிதருக்கு அடையாளம் எனது தந்தை. அவருக்கு இணையாக எந்த ஆணும் இல்லை என்பேன். சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சி, காதல் படங்களில் நடித்தேன். அந்த படங்கள், வெளிநாடுகளில் சுற்றும் மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.

அதையும் மீறி ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இதுபோன்ற படங்களில் நடிப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. அதையும் மீறி அந்த படத்துக்காக கிடைக்கும் வரவேற்புகளை நினைக்கும்போது சிரமங்கள் மறைந்து விடுகிறது.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions