ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா

Bookmark and Share

ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி-2’க்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘பாகமதி’ படமும் தெலுங்கில் வெற்றி படமாக அமைந்தது. நல்ல வசூலையும் கொடுத்தது.

இதன்பிறகு புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. பாகுபலி நாயகன் பிரபாசுக்கும் இவருக்கும் திருமணம் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அனுஷ்காவின் குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், இவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், சமீபகாலமாக புதிய படங்களில் நடிப்பதில் அனுஷ்கா ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், அனுஷ்கா ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று இருக்கிறார். கேதார்நாத் கோவிலுக்கு அவர் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த சுற்றுப்பயணம் குறித்து அவர் தனது பேஸ்புக், டுவிட்டரில் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஆனால், அனுஷ்கா நெற்றி நிறைய திருநீறு பூசி, குங்குமம் வைத்து ருத்ராட்ச மாலை அணிந்து அடையாளம் தெரியாத அளவு பக்தையாக மாறி இருக்கும் படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Post your comment





Related News
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!
பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த அனுஷ்காவின் பாகமதி - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions