அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...?

Bookmark and Share

அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...?

பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் போது கதாநாயகிகளும் பொதுவாக பேசப்படுவார்கள். ஆனால், தொடர்ந்து இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என்ற கேள்வி 'என்னை அறிந்தால்' படத்தைப் பார்த்ததும் எழுந்துள்ளது.

இந்தப் படத்திற்கு முன் 'லிங்கா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரம் மட்டும் ஏனோ, தானோ என்றில்லாமல் அவருக்கான ஆடை அலங்காரம், ஹேர்ஸ்டைல், என எதுவும் சரியாக இல்லாமல்  அவரை அழகாகத் திரையில் பார்க்க முடியவில்லை.

அதே சமயத்தில் வெளியிடப்பட்ட தெலுங்குப் படமான 'ருத்ரமாதேவி' புகைப்படங்களும், 'பாகுபலி' படத்தின் புகைப்படங்களும் அனுஷ்காவை மிக அழகாகக் காட்டின. இந்தப் புகைப்படங்களில் தெரிவது போல் அழகாக இல்லாமல் 'லிங்கா' படத்தில் அனுஷ்கா ஏன் இப்படி இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

அது 'என்னை அறிந்தால்' படத்திலும் தொடர்வதுதான் ஆச்சரியமாக உள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷாவை அழகாகக் காட்டிய அளவிற்கு, அவருக்கு செலுத்திய கவனத்தில் பாதியைக் கூட அனுஷ்கா மீது செலுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஏன் இப்படி அனுஷ்காவிற்கு மட்டும் நடக்கிறது. இனி மேலாவது இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் படத்தைத் தவிர்ப்பதுதான் அனுஷ்காவிற்கு நல்லது என்ற பேச்சு எழுந்துள்ளது. அனுஷ்காவின் கவனத்திற்கு யாராவது இதைக் கொண்டு சென்றால் அது அவருக்கு நல்லது.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions