சம்பளத்தை குறைத்தார் அனுஷ்கா

Bookmark and Share

சம்பளத்தை குறைத்தார் அனுஷ்கா

தென்னிந்திய ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அனுஷ்கா. ரூ.3 கோடி அவர் பெறுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆர்யாவுடன் சேர்ந்து ‘இரண்டாம் உலகம்'  படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவான அப்படம் இரு மொழிகளிலும் தோல்வியை தழுவியது.

இதனால் பட தயாரிப்பு நிறுவனம் பாதிக்கப்பட்டது. தோல்வியிலிருந்து மீளும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் தெலுங்கு பட சீனியர் இயக்குனர் ராகேவந்திர ராவ் மகன் பிரகாஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இப்படத்தில் நடிக்க ஆர்யா, அனுஷ்காவை அணுகியபோது இருவருமே வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்தபோதும் நடிக்க சம்மதித்தனர்.

ஏற்கனவே ஏற்பட்ட பைனான்ஸ் ரீதியான இழப்பிலிருந்து அந்நிறுவனம் மீள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆர்யா, அனுஷ்கா இருவரும் புதிய படத்தில் நடிக்க தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக கூறினர்.

சமீபத்தில் வெளியான ‘சேர்ந்து போலாமா‘ படத்தில் பேசிய சம்பளம் தரவில்லை என்பதற்காக பட புரமோஷனுக்கு வர முடியாது என்று பட ஹீரோ வினய் கூறினார். ' அப்படத்தின் நாயகியையும் தூண்டிவிட்டு புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க விடாமல் செய்த வினய் போன்ற நடிகர்களுக்கு மத்தியில் தயாரிப்பாளரின் நலனை கருத்தில் கொண்டு சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்த ஆர்யா, அனுஷ்காவுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது'  என பட யூனிட்டார் கூறினர். 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions