குண்டாவது எப்படி? இஞ்சி இடுப்பழகி அனுஷ்காவின் டிப்ஸ்

Bookmark and Share

குண்டாவது எப்படி? இஞ்சி இடுப்பழகி அனுஷ்காவின் டிப்ஸ்

படத்துக்காக பிரபல ஹீரோக்கள் தங்கள் உடல் எடையை அதிகமாக்கி கொள்வார்கள். பின்னர் எடையை குறைப்பார்கள். கதாநாயகிகள் அனைவரும் உடலை ஒல்லியாக ஒரே அளவில் வைத்துக் கொள்ளத்தான் விரும்புவார்கள். ஆனால் அனுஷ்கா ஆர்யாவுடன் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தனது உடல் எடையை அதிகமாக்கி குண்டு பெண்ணாக மாறினார். 

முதலில் அவர் குண்டு பெண்ணாக நடித்த படம் வெளியானபோது ‘கிராபிக்ஸ்’ என்று தான் அனைவரும் நினைத்தார்கள். உண்மையாகவே அவர் குண்டான விஷயம் வெளியான போது, ‘மார்க்கெட்டில்’ உள்ள ஒரு நடிகை துணிச்சலாக உடல் எடையை அதிகரித்து இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டனர். இப்போது அவர் மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார். 

உடல் எடையை அதிகரித்த ரகசியம் குறித்து அனுஷ்கா, “நான் இந்த படத்துக்காக என் உடல் எடையை 20 கிலோ அதிகரித்தேன். இதற்காக தினமும் 3 வேளையும் அரசி சோறு, ருசியான கூட்டு, குழம்புடன் சாப்பிட்டேன். இது தவிர மாவு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தேன். உடற்பயிற்சி செய்வதையும் விட்டு விட்டேன். இதனால் உடல் எடை அதிகமானது. 

என்னைப் பார்த்தவர்கள் பயந்து போனார்கள். ஆனால் எனக்கு எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது ‘பாகுபலி 2’ படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த மாத கடைசியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக மீண்டும் உடல் எடையை குறைத்து வருகிறேன்.

இதுவரை 7 கிலோ குறைந்து இருக்கிறது. மாவு உணவுகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி இருக்கிறேன். படப்பிடிப்புக்கு முன்பு இன்னும் எடையை குறைத்து தயாராகி விடுவேன்”. என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions