அனுஷ்காவை அலைக்கழிக்கும் வதந்திகள், செய்திகள்...

Bookmark and Share

அனுஷ்காவை அலைக்கழிக்கும் வதந்திகள், செய்திகள்...

அனுஷ்கா, எவ்வளவு அழகு என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். தமிழில் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் அவர் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் அனுஷ்காவிற்கும் இங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த ரசிகர்களை, 'லிங்கா, என்னை அறிந்தால்' ஆகிய இரு படங்கள் திருப்திப்படுத்தவில்லை.

இரண்டு படங்களிலுமே தோற்றத்திலும், கதாபாத்திரத்திர வடிவமைப்பிலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இவை தமிழ்ப் படங்களில் உள்ள நிலை என்றால் அனுஷ்கா பெரிதாக நம்பியிருக்கும் 'பாகுபலி' படத்தைப் பற்றி தெலுங்குத் திரையுலகில் கடந்த சில நாட்களாக ஒரு வதந்தி பரவியது.

அதாவது இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் அனுஷ்கா இடம் பெற மாட்டார், இரண்டாவது பாகத்தில்தான் அனுஷ்கா வருகிறார் என்று பரவியது.

ஆனால், இப்படிப்பட்ட வதந்தியை படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துள்ளன. படத்தின் முதல் பாகத்திலேயே படத்தில் நடித்துள்ள அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா என அனைத்து நட்சத்திரங்களும் வருகிறார்கள்.

பரவி வரும் வதந்தியும் உண்மையல்ல என்று தெரிவித்திருக்கிறார்களாம். இனி, படத்தைப் பற்றி படம் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது பேசவும் தடை விதித்திருக்கிறார்களாம்.

அனுஷ்காவைச் சுற்றி மட்டுமே கடந்த சில படங்களாக ஏன் இப்படிப்பட்ட செய்திகள் பரவி வருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கவலைப்படுகிறார்களாம்.  


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions