‘ருத்ரமாதேவி’யால் நகைக்கடைகளில் ஏறி இறங்குகிறேன் அனுஷ்கா!

Bookmark and Share

‘ருத்ரமாதேவி’யால் நகைக்கடைகளில் ஏறி இறங்குகிறேன் அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா நடித்த பாகுபலி, ருத்ரமாதேவி படங்கள் தமிழ், தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் வெளியானது. மேலும் ஆர்யாவுடன் ஜோடியாக நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படமும் விரைவில் வெளி வரவுள்ளது.

இதுமட்டுமின்றி மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன. சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் நகைகள் மீது ஆர்வம் அதிகமாகியுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர்,
“ருத்ரமாதேவி படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை எனக்கு நகைகள் அணிய பிடிக்காது. கழுத்தில் எதுவும் அணிய மாட்டேன். காதிலும் தோடுகள் அணிவதில்லை.

கழுத்தில் நகைகள் அணிந்து செல்லும் பெண்களை வேடிக்கையாக பார்ப்பேன். ஆனால் இப்போது மாறிவிட்டேன். ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடித்த பிறகு நகைகள் மீது ஆர்வம் வந்துள்ளது. 

அந்த படத்தில் ராணி வேடத்தில் வந்தேன். கதாபாத்திரத்துக்காக நிறைய நகைகள் அணிய வேண்டி இருந்தது. பிரத்யேகமாக செய்யப்பட்ட அசல் தங்க நகைகளை அணிந்து நடித்தேன். 

அந்த கதாபாத்திரம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது எனக்கு நகைகள் அணிவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் நகைகள் அணிந்து போனால் அவற்றை உற்றுப்பார்க்கிறேன். நகைக்கடைகளிலும் ஏறி இறங்குகிறேன். பெண்களுக்கு நகைகள் அழகுசேர்க்கிறது என்பதை புரிந்து கொண்டு விட்டேன்”இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions