சுவையான உணவுக்காக பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா!

Bookmark and Share

சுவையான உணவுக்காக பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா!

பெரும்பாலான நடிகைகள் தங்களது வாயைக்கட்டி வயித்தக்கட்டித்தான் உடம்பை பராமரித்து வருவார்கள். ஆனால் அனுஷ்கா அப்படியில்லையாம். தான் விரும்பிய உணவுகள் எதுவாக இருந்தாலும் அதை உடனே சாப்பிட்டு விடுவாராம். அதேசமயம் தினசரி யோகா பயிற்சிகளை மட்டுமே கடைபிடித்து வருவாராம்.

மேலும், சில ஊர்களுக்கு சென்றால் அந்த ஊர்களின் ஸ்பெசல் உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்ட அனுஷ்கா, பாகுபலி படத்தில் நடித்ததுகூட நாவிற்கு சுவையான உணவு கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காகதானாம்.

இதுபற்றி அனுஷ்கா கூறும்போது, நான் பாகுபலி படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணமே, அப்படத்தின் ஹீரோ பிரபாஸ்க்கு அவரது அம்மா, அவர் எந்த படத்தில் நடித்தாலும் தினமும் மதிய வேளைகளில் வீட்டில் இருந்தே சமைத்து சாப்பாடு எடுத்து வருவார்.

அந்த சாப்பாட்டை பிரபாசுக்கு மட்டுமின்றி மற்ற நடிகர் நடிகைகளான எங்களுக்கும் கொடுப்பார்கள். அது அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.

அதேபோல்தான் டைரக்டர் ராஜமெளலியின் மனைவியும் ரொம்ப டேஸ்டாக சமைத்து எடுத்து வருவார். அவரும் பிரபாசின் அம்மாவைப்போல்தான் மற்றவர்களுக்கும் சாப்பாடு கொடுப்பார்.

இரண்டுபேரின் சாப்பாடும் ரொம்ப ருசியாக இருக்கும். அந்த வகையில், நான் இந்த பாகுபலி படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு அவர்களின் சுவையான சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் ஒரு காரணம் என்கிறார் அனுஷ்கா.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions