படமாகும் சாய்பாபா வாழ்க்கை கதை: அனுஷ்கா நடிக்கிறார்

Bookmark and Share

படமாகும் சாய்பாபா வாழ்க்கை கதை: அனுஷ்கா நடிக்கிறார்

அருந்ததி படத்துக்கு பிறகு அனுஷ்காவுக்கு அதே மாதிரி சாயலில் சரித்திர மற்றும் புராணபட வாய்ப்புகள் குவிகின்றன.

தெலுங்கு, தமிழிலில் தயாராகும் ருத்ரமா தேவி என்ற வரலாற்று கதையம்சம் உள்ள படத்தில் ராணி வேடத்தில் நடிக்கிறார்.

பாகுபலி என்ற படத்திலும் ராணியாக நடிக்கிறார். இவ்விரு படங்களுக்காக வாள்சண்டை, குதிரைசவாரி பயிற்சிகள் பெற்றார். இவற்றின் பட வேலைகள் இறுதி கட்டத்தில் இருக்கிறது. விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் சாய்பாபா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சாய்பாபாவின் அற்புதங்களையும் மகிமைகளையும் சித்தரிக்கும் கதையம்சம் உள்ள பக்தி படமாக இது தயாராகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர். பாபா சத்யசாய் என இதற்கு பெயரிட்டுள்ளனர். கோடிராம கிருஷ்ணா இயக்குகிறார்.

இதில் சாய்பாபா கேரடக்டரில் திலீப் நடிக்கிறார். சாய்பாபாவின் தீவிர பக்தை கேரக்டரில் அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதாராபாத்தில் விரைவில் துவங்க உள்ளது. 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions