சினிமாவை நேசிப்பவரை நான் திருமணம் செய்துகொள்வேன்: அனுஷ்கா பேட்டி

Bookmark and Share

சினிமாவை நேசிப்பவரை நான் திருமணம் செய்துகொள்வேன்: அனுஷ்கா பேட்டி

நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். முடிவு எடுக்கும் அதிகாரம் வேண்டும். அவர்களை பெற்றோர்கள் கட்டுப்படுத்தி வைப்பதை கைவிட வேண்டும். எனக்கு சிறு வயதில் இருந்தே எந்த நிர்ப்பந்தங்களும் இருந்தது இல்லை. எனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்வதற்கு எனது தாய், தந்தை அனுமதி அளித்தனர்.

யோகா கற்றுக்கொள்ள விரும்பினேன். அதற்கு தடை சொல்லவில்லை. அதன்பிறகு சினிமா மீது ஆர்வம் வந்தது. அதற்கும் பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டினார்கள். இந்த சுதந்திரம்தான் என்னை யோகாவிலும், சினிமாவிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வைத்தது. சாதிக்கவும் வைத்தது.

சில பெற்றோர்கள் தங்கள் மகளை வீட்டு வாசலில் நிற்க கூட அனுமதிப்பது இல்லை. தனியாக வெளியே போய் வரவும் விடமாட்டார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு எப்படி தைரியம் வரும். எப்படி அவர்கள் முன்னேற முடியும். பெற்றோரிடம் நான் கேட்பதெல்லாம் பெண்களை சுதந்திரமாக விடுங்கள். அவர்கள் விரும்பிய துறைகளில் ஈடுபட அனுமதியுங்கள்.

உங்களுடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். பெண்களுக்கு பிடித்ததை செய்ய விடுங்கள். எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர் விருப்பம். விருப்பம்போல் வாழ விடுங்கள். அதை செய்யாதே. இதை செய்யாதே என்று பெண்களை கட்டுப்படுத்தக்கூடாது. எனக்கு இதுபோன்று கட்டுப்பாடு விதிப்பவர்கள் மத்தியில் இருந்தால் மூச்சே நின்று விடுவதுபோல் ஆகிவிடும். எனவே அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகிப்போய் விடுவேன்.

நான் ஒரு நடிகை. எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவர் சினிமாவை நேசிக்க வேண்டும். எனது நடிப்பையும் கவுரவிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.’’

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions