அனுஷ்காவின் திரைக்கு 'உள்ளே, வெளியே'...

Bookmark and Share

அனுஷ்காவின் திரைக்கு 'உள்ளே, வெளியே'...

அனுஷ்காவை திரையில் கொஞ்சம் கிளாமராகப் பார்ப்பவர்கள் அவர் திரைப்பட நிகழ்ச்சிகளிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் போது பாந்தமாக, குடும்பக் குத்து விளக்காக ஆடையணிந்து வருவதைத்தான் பார்த்திருப்பார்கள்.

ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் நடிக்க வந்த போது, கொஞ்சம் கிளாமரான ஆடைகளை அணியக் கொடுத்த போது தயக்கத்துடன் வாங்கினாராம் அனுஷ்கா. அப்படி அணிந்து நடிக்க ஆரம்பித்ததுமே அவர்கள் வீட்டில் உள்ளவர்களே ஆச்சரியப்பட்டார்களாம்.  

வீட்டில் இருக்கும் போதெல்லாம் அனுஷ்கா புடவை, சுடிதார் போன்றவைகளைத்தான் அணிவாராம். குடும்பப் பாங்காக உடை அணிவதுதான் அவருடைய வழக்கமாம். சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் அனுஷ்காவின் ஆடையில் மாற்றங்கள் வந்ததை அவர்களது குடும்பத்தினரும் முதலில் நம்பவில்லையாம்.

ஆனாலும், இப்போதும் வெளியில் வரும் போதும் கண்ணியமான உடைகள் அணிவதைத்தான் அனுஷ்கா பின்பற்றுகிறாராம். திரையில் இருக்கும் அனுஷ்கா வேறு, வெளியில் வரும் அனுஷ்கா வேறு என்று காரணத்தையும் சொல்கிறாராம்.

திரைப்படங்களில் நடிக்கும் போது கதாபாத்திரத்திற்கேற்ப, இயக்குனர்கள் சொல்வதற்கேற்ப ஆடை அணிந்துதான் ஆக வேண்டும். அதனால்தான், குடும்ப விழாக்களிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் எனக்குப் பிடித்தமான கண்ணியமான உடைகளை அணிகிறேன் என்று சொல்கிறார். அனுஷ்கா புடவையில் அழகா அல்லது மாடர்ன் உடையில் அழகா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும். 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions