
பாகுபலி படத்தை தொடர்ந்து அனுஷ்காவின் பட வரிசை பெருகி வருகிறது. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இஞ்சி இடுப்பழகி படம் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படமாகும். படப்பிடிப்பு முற்றிலும் முடிந்ததை தொடர்ந்து திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது
எடை குறைப்பு பற்றிய கதையான இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் தோன்றுகிறார். இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடியதாகவும் , அதற்கு பிறகு ஆர்யா கொடுத்த சில டிப்ஸ் மூலம் எடையை மீண்டும் குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆர்யா இந்தப் படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராக தோன்றுகிறார்.
பல பிரத்தியேகக் காட்சிகள் சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் ஆர்யா பங்கேற்று வெற்றிப் பெற்ற சர்வதேச சைக்கிள் போட்டி பற்றியும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆர்யா-அனுஷ்கா ஜோடியின் சமீபத்திய பெரும் வெற்றி இந்த ஜோடியின் மீதும் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு உள்ள ஆர்வத்தைக் கூட்டுகிறது.
Post your comment