திரையுலகில் 10 ஆண்டுகளைக் கடந்த அனுஷ்கா

Bookmark and Share

திரையுலகில் 10 ஆண்டுகளைக் கடந்த அனுஷ்கா

திரையுலகில் 10 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளார் அனுஷ்கா. இவர் நடித்து கடைசியாக வெளிவந்த  பாகுபலி  படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.

2005ம் ஆண்டு ஜுலை 21ம் தேதி வெளிவந்த  சூப்பர்  தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் அனுஷ்கா. மங்களூரில் பிறந்த அனுஷ்கா, பெங்களூரில் பள்ளிப் படிப்பையும், புகழ் பெற்ற மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர்.

யோகா பயிற்சியாளராகப் பணியாற்றிய போது, கிடைத்த நட்பினால் நாகார்ஜுனா மூலம்  சூப்பர்  படத்தில் அறிமுகமானார்.   தொடர்ந்து பல தெலுங்குப் படங்களில் நடித்த அனுஷ்காவிற்கு 2009ம் ஆண்டு வெளிவந்த  அருந்ததி  படமும், பிரபாஸ் ஜோடியாக நடித்த  பில்லா  படமும் பரபரப்பாகப் பேச வைத்தது.  

தமிழில் 2006ம் ஆண்டு வெளிவந்த  ரெண்டு  படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து “வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத் திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இப்போது  இஞ்சி இடுப்பழகி  படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள  ருத்ரமாதேவி  விரைவில் வெளியாக உள்ளது.  ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, ஆர்யா உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

இன்றைக்கு இருக்கும் போட்டி நிறைந்த உலகத்தில் 10 வருடங்களாக முன்னணியில் இருப்பது சாதாரண விஷயமில்லை.   தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளைத் தவிர வேறு எந்த மொழிகளிலும் அனுஷ்கா நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions