அனுஷ்காவிற்கும் காதல் பிரிவு...?

Bookmark and Share

அனுஷ்காவிற்கும் காதல் பிரிவு...?

ஒருவர் திரைப்பட நடிகையாக அறிமுகமாகும் போதே அவரைப் பற்றிய கிசுகிசுக்களும், வதந்திகளும் கூடவே அறிமுகமாகிவிடுகின்றன.

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரைக்கும் சினிமாவல் எது மாறியதோ இல்லையோ இந்தக் கிசுகிசு மட்டும் மாறவேயில்லை. கடந்த வாரம் முழுவதும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல், திருமணம் என பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன.

தற்போது டோலிவுட்டிலிருந்து ஒரு தகவல் கசிந்து வந்திருக்கிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் அனுஷ்கா அவருடைய காதலரை சமீபத்தில் பிரிந்து விட்டாராம்.

கடந்த ஒரு வருட காலமாக அனுஷ்கா ஒருவரைக் காதலித்து வந்ததாகவும் அவரை இந்த வருடக் கடைசியில் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், சமீபத்தில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவரை விட்டுப் பிரிந்து விட்டாராம். இதனால், ஏற்கெனவே முடிவெடுத்தபடி திருமணம் செய்வதையும் தள்ளிப் போட்டுவிட்டார் என்கிறார்கள்.

அனுஷ்கா நடித்து விரைவில் “ருத்ரமாதேவி, பாகுபலி” படங்கள் வெளிவர உள்ளன. மேலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் இஞ்சி இடுப்பழகி படத்திலும் நடித்து வருகிறார். வேறு பட வாய்ப்புகள் வராததால் திருமணம் செய்து கொள்வாரா அல்லது இன்னும் கொஞ்ச நாள் காத்திருப்பாரா என டோலிவுட்டில் கொஞ்சம் அதிகமாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions