தன் முதல் பட ஷுட்டிங்கில் ஓடிப் போக நினைத்த அனுஷ்கா

Bookmark and Share

தன் முதல் பட ஷுட்டிங்கில் ஓடிப் போக நினைத்த அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் இன்று முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, தான் அறிமுகமான முதல் படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே ஓடிப் போக நினைத்தாராம்.

இவர் நாயகியாக அறிமுகமான சூப்பர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஒரு காட்சியில் நடிக்க அனுஷ்கா அவ்வளவு ரீ-டேக் வாங்கியதோடு நடனமும் சிறிது கூட வராதாம்.

ஆனால் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும், நாயகன் நாகார்ஜுனாவும் அதைக் கண்டு கோபப்படாமல் பொறுமையாக இருப்பார்களாம். ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டதோடு படப்பிடிப்பை விட்டு ஓடிப் போகலாம் என்றும் முடிவு செய்தாராம்.

ஆனால், நாகார்ஜுனாதான் அனுஷ்காவிற்கு தைரியமூட்டி, ஆதரவாக இருந்து தொடர்ந்து நடிக்கக் காரணமாக இருந்தாராம். அந்த சம்பவத்தைப் பற்றி சமீபத்தில் வெளிப்படையாக அனுஷ்காவே சொல்லியிருக்கிறார்.

அன்று சினிமாவே வேண்டாம் என்று அனுஷ்கா மட்டும் ஓடிப் போயிருந்தால் இன்று தமிழ், தெலுங்குத் திரையுலகம் ஒரு அழகான, திறமையான நடிகையை இழந்திருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அனுஷ்கா நடித்து தன்னுடைய திறமையை மேலும் வெளிப்படுத்தி வருகிறார். இவரின் ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரயிருக்கின்றன.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions