ஹீரோயின்களைப் பற்றியும் யோசிக்கலாமே?, அனுஷ்கா வேண்டுகோள்

Bookmark and Share

ஹீரோயின்களைப் பற்றியும் யோசிக்கலாமே?, அனுஷ்கா வேண்டுகோள்

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு  திரையுலகத்திலும் ஹீரோயின்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. எப்போதோ ஒரு முறைதான் ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரும். ஆனால், மலையாளத் திரையுலகத்தில் ஹீரோயின்களுக்கும் அவர்களது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

முன்பெல்லாம் விஜயசாந்தி நடித்த படங்கள் ஹீரோக்களின் ஆக்ஷன் படங்களுக்கு சவால் விடும் படங்களாக அமைந்து தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வசூலைப் பெற்றன. அதன் பின் அவருடைய இடத்தை நிரப்பும் அளவிற்கு வேறு யாரும் இதுவரை வரவில்லை.

இப்போதுதான் அனுஷ்காவிற்கு ஓரளவிற்கு அப்படி சில வாய்ப்புகள் வந்துள்ளன.  பாகுபலி  படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்காவின் நடிப்பு, ஏமாற்றத்தை அளித்தாலும், இரண்டாம் பாகத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்கிறார்கள். அடுத்து அனுஷ்கா நடித்து வெளிவர உள்ள  ருத்ரமாதேவி  படத்தில், அனுஷ்காவைச் சுற்றியேதான் கதையே நகர உள்ளது.

இந்தப் படத்தில் அனுஷ்கா பல சாகசங்களை செய்துள்ளாராம். அதோடு தான் நடித்து வரும் மற்றொரு படமான  இஞ்சி இடுப்பழகி  படத்தில் கதாபாத்திரத்திற்காக தன் அழகிய தோற்றத்தைக் கூட குண்டாக மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா.

ஹீரோயின்களுக்கும் இது மாதிரியான கதாபாத்திரங்களைக் கொடுக்கவும் இயக்குனர்கள் முன் வர வேண்டும். எங்களைப் போன்ற ஹீரோயின்களும் ஆக்ஷன் படங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயாராக உள்ளோம். எங்களைப் பற்றியும் யோசித்தால் நன்றாக இருக்கும்,” என அனுஷ்கா கேட்டுக் கொண்டுள்ளாராம்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions