அனுஷ்காவை மையப்படுத்தி தயாராகும் படங்கள்!

Bookmark and Share

அனுஷ்காவை மையப்படுத்தி தயாராகும் படங்கள்!

அருந்ததியில் அதிரடி வேடத்தில் நடித்த அனுஷ்காவுக்கு அதன்பிறகு அவரது திறமைக்கு தீனி போடும் வேடங்கள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி போன்ற படங்கள் அவருக்கு பெருந்தீனி போட்டுள்ளன.

ஆக்சன் நடிகர்களுக்கு இணையாக உடம்பை வளைத்து நெளித்து வாள் ஏந்தி அவர் சண்டை போட்டு நடித்திருப்பது தென்னிந்திய நடிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு உடலை வருத்தி நடித்திருக்கும் அனுஷ்கா, அடுத்தபடியாக தமிழ்,தெலுங்கில் உருவாகும் கோடி ராமகிருஷ்ணாவின் பாபா சத்யசாய் என்ற படத்தில் பாபாவின் பக்தையாக நடிக்கிறார்.

இதற்காக பக்கா ஆன்மீகவாதியாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் அவர். இதையடுத்து, ஆர்யாவுடன் அவர் ஜோடி சேரும் சைஸ் ஸீரோ என்ற படமும் அனுஷ்காவை மையப்படுத்திதான் தயாராகிறது.

இந்த படம் பெண்களின் உடல் அமைப்பை மையக்கருவாகக் கொண்டு உருவாவதால், ஹீரோக்கள் உடல் எடையை குறைத்து அதிகப்படுத்தி நடிப்பது போல் அனுஷ்காவும் உடல் எடையை கூட்டி குறைத்து நடிக்கிறார்.

ஆக, இந்த இரண்டு படங்களுமே அனுஷ்காவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions