அனுஷ்காவைத் தொடரும் வதந்தி...

Bookmark and Share

அனுஷ்காவைத் தொடரும் வதந்தி...

அனுஷ்கா நடித்து இன்னும் சில நாட்களில் தமிழில் 'என்னை அறிந்தால்' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

அந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வேறு எந்த புதுப் படமும் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை. ஏனென்றால், அனுஷ்காவிற்கு தற்போது எந்தப் புதுப்படங்களும் ஒப்பந்தமாகவில்லை.

இந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்காவிற்குத் திருமணம் நடந்தாலும் நடக்கலாம் என வழக்கம் போல அவரைப் பற்றிய வதந்தி ஏற்கெனவே பரவ ஆரம்பித்துவிட்டது.

அவருடைய பெற்றோர்கள் இந்த ஆண்டு கண்டிப்பாகத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள் என வதந்திக்கு அவரது குடும்பத்தாரையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.

'அருந்ததி' படம்தான் அனுஷ்கா இதுவரை நடித்துள்ள படங்களிலேயே அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதே அளவிற்கு 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்களும் பெற்றுத் தரும் என்கிறார்கள்.

அதனால், அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடித்ததே சாதனைதான். அதனால், காலாகாலத்தில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள் என டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions