தன் வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார் அனுஷ்கா

Bookmark and Share

தன் வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா, அஜீத்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார். அப்போது அஜீத்திடம் கற்றுக் கொண்ட மூன்று விஷயங்கள். ஒன்று மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவது, இரண்டு பிரியாணி சமையல், மூன்றாவது தனக்காக உழைப்பவர்களுக்கு உதவுவது.

என்னை அறிந்தால் படப்பிடிப்பின் போதுதான் அஜீத் தன் வீடு மற்றும் தோட்டப்பணியாளர்களுக்கு கிழக்கு கடற்கரைசாலையில் அடுக்குமாடி வீடு கட்டிக் கொடுத்தார். இப்போது அதே பாணியில் அனுஷ்கா தன் வீட்டு பணியாளர்களுக்கு ஐதராபத்தின் புறநகர் பகுதியில் வீடு கட்டி வருகிறார்.

"சாதாரண யோகா டீச்சராக இருந்து இன்றைக்கு நான் இவ்வளவு வசதியோட இருக்கேன்னா அதுக்கு காரணம் நான் மட்டுமில்லை என்னை சுற்றி இருக்கிறவங்களும், எனக்காக இரவு பகலா உழைத்தவர்களும்தான்.

அவர்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தேன். அதுதான் இது. நடிகை என்பதை தாண்டி நான் எல்லா உணர்வுகளும் மிக்க சராசரி பெண்" என்கிறார் அனுஷ்கா.


Post your comment

Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions