பட வாய்ப்புகள் குறைந்ததால் ஓட்டல் தொடங்கும் அனுஷ்கா

Bookmark and Share

பட வாய்ப்புகள் குறைந்ததால் ஓட்டல் தொடங்கும் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு பட உலகில் 12 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அருந்ததியில் மந்திரவாதியை பந்தாடிய ஆக்ரோஷமும், பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் ராணியாக வந்து வாள் வீசியதும், இஞ்சி இடுப்பழகி படத்தில் 20 கிலோ எடை கூடி குண்டு பெண்ணாக வந்ததும் இவரது நடிப்பு திறமையை பறைசாற்றுவதாக அமைந்தன.

வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், லிங்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்கள் அனுஷ்கா நடிப்பில் வந்து ரசிகர்களை கவர்ந்தன. இவருக்கு தற்போது 36 வயது ஆவதால் பட வாய்ப்புகள் குறைகின்றன. பாகுபலி இரண்டாம் பாகம், ஓம்நமோ வெங்கடேசாய, சி-3, பாக்மதி ஆகிய 4 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இந்த படங்களிலும் அவர் நடித்து முடித்து விட்டார். சி-3 படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து மற்ற படங்களும் வெளியாக இருக்கின்றன.

வேறு புதிய படங்கள் எதிலும் அனுஷ்கா ஒப்பந்தமாகவில்லை. வயது முதிர்ச்சியால் இளம் கதாநாயகர்கள் ஜோடி சேர தயங்குவதும் புதிய கதாநாயகிகள் வரத்து அதிகரித்து இருப்பதும் அனுஷ்கா மார்க்கெட்டில் சரிவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணத்தை முடித்து விட குடும்பத்தினர் ஆர்வம் காட்டுகிறார்கள். மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அனுஷ்கா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா வாய்ப்பு இல்லாததால் ஓட்டல் தொழிலில் ஈடுபட அனுஷ்கா திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது. சம்பாதித்த பணத்தை ஓட்டல் தொழிலில் முதலீடு செய்ய இருக்கிறார் என்கின்றனர்.

ஐதராபாத்திலும், சென்னையிலும் ஓட்டல்கள் திறக்க முடிவு செய்து இருக்கிறார். ஏற்கனவே பல நடிகைகள் ரியல் எஸ்டேட், நகைக்கடை, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது என்று இதர தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 


Post your comment





Related News
சிங்கம் 3 இயக்குனர் ஹரிக்கு லக், தங்கப்பரிசு ஆஃபர்!
அனுஷ்காவுடன் அம்பு விடும் பிரபாஸ்.... பாகுபலி 2 தமிழ் டிசைன் வெளியானது!
என்னை கண்ட கண்ட இடங்களில் தொட்டு கஷ்டப்படுத்தினார் - பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா சர்மா குற்றசாட்டு
அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.
நான் ரெடி தான், ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டாமா?: அனுஷ்கா
இரண்டே இரண்டு காரியம் செய்து சிங்கத்தை சாச்சுப்புட்ட அனுஷ்கா
சூர்யாவின் எஸ்3 படத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
கோஹ்லியுடன் திருமணம்: மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் அனுஷ்கா
S3 ரிலீஸ் தள்ளிபோகிறது – புதிய ரிலீஸ் தேதி என்ன?
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions