சிங்கம்-3 க்காக வெயிட் போடும் அனுஷ்கா!

Bookmark and Share

சிங்கம்-3 க்காக வெயிட் போடும் அனுஷ்கா!

ஹரி இயக்கிய சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அனுஷ்கா. சூர்யாவை விட அனுஷ்கா அதிக உயரமானவர் என்பதால், அவர்களை நெருக்கமாக வைத்து எடுக்கும் காட்சிகளை சூர்யாவை உயரமான இடத்தில் நிற்க வைத்தே படமாக்கினார் ஹரி.

மேலும், முதல் இரண்டு பாகத்தில் அவர்களை காதலர்களாக காண்பித்த ஹரி, அடுத்து இயக்கும் சிங்கம் 3ம் பாகத்தில் அவர்களை கணவன்-மனைவியாகவே காண்பிக்கிறாராம்.

கதைப்படி அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதாககூட கூறப்படுகிறது. அதனால், ஒரு குழந்தைப்பெற்ற குடும்பப் பெண்ணுக்குரிய உடல் அமைப்புடன் அனுஷ்கா மாற வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் இயக்குனர்.

அதனால், தற்போது ஆர்யாவுடன் நடிக்கும் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகப்படுத்தி, குறைத்து என இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிக்கும் அனுஷ்கா, இந்த படத்தை முடித்ததும் சிங்கம்-3க்காக வெயிட் போடப்போகிறாராம்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions