இளையராஜாவை வழியனுப்ப வந்த அனுஷ்கா

Bookmark and Share

இளையராஜாவை வழியனுப்ப வந்த அனுஷ்கா

தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகி வரும் படம் ருத்ரமாதேவி. தமிழில் முரளி ராமநாராயணன் தயாரிக்கிறார். அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன். சுமன், கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார்.

இதன் பின்னணி இசை கோர்ப்புக்காக இளையராஜா நாளை (மார்ச் 31) லண்டன் செல்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவிற்கு இது முக்கியமான படம். அவரை நம்பியே 100 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

குணசேகரன் இயக்குகிறார். அனுஷ்கா, இளையராஜாவின் தீவிர ரசிகை. அண்மையில் ருத்ரமாதேவி டிரைலருக்கு இளையராஜா அமைத்திருக்கும் இசை பார்த்து மிரண்டு போய்விட்டார்.

இதனால் இளைராஜாவை வாழ்த்தவும், அவரிடம் வாழ்த்து பெறவும், லண்டனுக்கு வழியனுப்பி வைக்கவும் விரும்பிய அனுஷ்கா இதற்காக சென்னை வந்தார். பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவை சந்தித்து அவருக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார். அவரிடம் வாழ்த்து பெற்றார்.

ருத்ரமாதேவி படத்தை பார்த்துவிட்ட இளையராஜா அதில் அனுஷ்காவின் நடிப்பை வியந்து பாராட்டினார். "ருத்ரமாதேவி படம் உங்களுக்கு பெரிய இடத்தை தரும்" என்று இளையராஜா கூறினார்.

பின்னர் அனுஷ்கா இளையராஜாவிடம் விடைபெற்றுச் சென்றார். இந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர் முரளி ராமநாராயணன், இயக்குனர் குணசேகரன் உடன் இருந்தனர்.

 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions