கிசுகிசுக்களுக்காக வருந்தினால் தூக்கம் வராது: அனுஷ்கா

Bookmark and Share

கிசுகிசுக்களுக்காக வருந்தினால் தூக்கம் வராது: அனுஷ்கா

“சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களை பார்த்து கவலைப்பட்டு இருக்கிறேன். இதனால் குடும்பத்தினர் மத்தியிலும் கஷ்டம் இருந்தது.

ஆனால் இப்போது பக்குவப்பட்டு விட்டேன். பிரபலமானவர்கள் இதையெல்லாம் சந்தித்துதான் ஆக வேண்டும் என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறேன். உலகம் என்னைப் பற்றி என்ன பேசுகிறது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டினால் நிம்மதி இருக்காது.

அவதூறுகளுக்கு கவலைப்பட்டால் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது சாதாரணம். சொந்த வாழ்க்கையில் அவை தாக்கத்தை ஏற்படுத்துவதும் சகஜம்தான். எனக்கும் அவை வலியை கொடுத்து இருக்கின்றன. ஆனால் அது கொஞ்ச நேரம்தான் இருக்கும். அதன் பிறகு சாதாரணமாகி விடுவேன்.

கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் தூக்கம் வராது. நம் மீது எந்த தவறும் இல்லாதபோது ஏன் வருத்தப்படவேண்டும்? இந்த உணர்வு எனக்குள் வந்த பிறகுதான் நன்றாக தூக்கம் வருகிறது. தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. கதாபாத்திரங்களும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. எல்லா படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions