
நேற்று தணிக்கைக்கு அனுப்பப்பட்ட ஈட்டி படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதேபோல், ஆர்யா, அனுஷ்கா, சோனல் சௌஹான், பிரகாஷ் ராஜ், ஊர்வசி முதலானோர் நடித்துள்ள 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்கும் தணிக்கையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இஞ்சி இடுப்பழகி படத்தில் ஒரு சில காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக இருப்பதாகவும் அதனால் படத்துக்கு யு சான்றிதழ் தர முடியாது என்று தணிக்கைக்குழுவினர் கூறியதை அடுத்து, அவர்கள் சுட்டிக்காட்டிய காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிட்டனர்.
எனவே 'இஞ்சி இடுப்பழகி'க்கு அனைவரும் பார்க்க கூடிய படம் எனற 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். தணிக்கை சான்றிதழ் பெற்றதும் வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் என்று வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டனர்படக்குழுவினர்.
'பிவிபி சினிமாஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் ராவ் என்ற தெலுங்குப்பட இயக்குநர் இயக்கியுள்ளார். 'சைஸ் ஜீரோ' என்ற பெயரில் தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தெலுங்கிலும் நவம்பர் 27 அன்றுதான் வெளியாகவிருக்கிறது. 'பாகுபலி', 'ருத்ரம்மா தேவி' ஆகிய படங்களை தொடர்ந்து அனுஷ்கா நடித்துள்ள படம் இது.
இப்படத்தில் குண்டுப்பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. இப்படத்தில் ஆர்யா டாகுமென்டரி படம் எடுப்பவராக நடித்துள்ளார்.
சைஸ் ஜீரோ, இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் இரண்டு மொழியிலும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1500 தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறதாம்.
Post your comment