அனுஷ்காவின் நடிப்பு கமலும், விக்ரமும் கலந்த கலவை:இயக்குனர் மோகன் ராஜா

Bookmark and Share

அனுஷ்காவின்  நடிப்பு கமலும், விக்ரமும் கலந்த கலவை:இயக்குனர் மோகன் ராஜா

‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்கள் மற்றும் டிரைலர்  வெளியீட்டு நிகழ்ச்சியில், நடிகர் ஆர்யா, அனுஷ்கா, நாசர், கிருஷ்ணா, இயக்குனர் மோகன்ராஜா, இயக்குனர் திருமணி புகழேந்தி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஏ.எல்.அழகப்பன், சிவி.குமார், சிவா, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இப்படத்தின் டிரைலரை இயக்குனர் மோகன்ராஜா வெளியிட்டு பேசும்போது, இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பற்றி பரவலான ஒரு கருத்து அனைவரிடமும் இருந்து வருகிறது. அதை சரியாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். 

ஏற்கனெவே, இயக்குனர் பாக்யராஜ் உடல் பருமனை மையமாக வைத்து ‘சின்ன வீடு’ என்ற படத்தை கொடுத்தார். அது அன்றைய காலகட்டத்துக்கு கச்சிதமாக பொருந்தியது. அதேபோல், இந்த படம் இன்றைய காலகட்டத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார். 

அனுஷ்கா பற்றி பேசும்போது, அனுஷ்கா இதுவரை எனக்கு அறிமுகமானதில்லை. ஆனால், அவருடைய படங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அனுஷ்காவை பார்க்கும்போது, கமலும், விக்ரமும் கலந்த ஒரு நடிகையாகவே நான் பார்க்கிறேன். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது என்று கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions