குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா

Bookmark and Share

குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா

ஆர்யாவுடன் அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டுப் பெண்ணாக நடிப்பதற்காக உடல் எடையை 20 கிலோ அதிகரித்துக்கொண்டார். 

‘யோகா’ ஆசிரியரான எனக்கு உடல் எடை அதிகரிப்பது, குறைப்பது எல்லாம் சர்வ சாதாரணம் என்றார். ‘பாகுபலி–2’ படத்தில் நடிக்க வேண்டி இருப்பதால் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டியுள்ளது.

எனவே அமெரிக்காவில் சிகிச்சை பெறுகிறார் என்றெல்லாம் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இப்போது உடல் எடையை துணிச்சலாக அதிகரித்தது ஏன் என்ற காரணத்தை அனுஷ்கா தெரிவித்துள்ளார். 

இதுபற்றி அவர் கூறியதாவது:– 

ஒவ்வொரு பெண்ணும் குண்டாக இருக்கிறோமே, ஒல்லியாக இருக்கிறோமே என்று கவலைப்பட வேண்டாம். அழகு என்பது உடலில் அல்ல. மனதில்தான் இருக்கிறது. எனவே அழகாக இல்லை என்று எந்த பெண்ணும் கவலைப்பட வேண்டியதே இல்லை. சின்ன வயதில் என்னை பலர் அழகாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

வளர்ந்த பிறகும் அதையேதான் சொல்லுகிறார்கள். எனவே என்னை எல்லோரும் வித்தியாசமாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. இதனால்தான் டைரக்டர் கதை சொல்லி நீங்கள் குண்டாக நடிக்க வேண்டியது இருக்கும் என்றதும் நான் சம்மதித்தேன்.

அதற்காக நிறைய சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்தேன். அது வித்தியாசமாக இருந்தது. இப்போது பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

 


Post your comment





Related News
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
20 கிலோ கூடிய அனுஷ்கா
ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா
எனது ரிலாக்ஸ் \'இஞ்சி இடுப்பழகி\' - அனுஷ்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions