எனது ரிலாக்ஸ் 'இஞ்சி இடுப்பழகி' - அனுஷ்கா!

Bookmark and Share

எனது ரிலாக்ஸ் 'இஞ்சி இடுப்பழகி' - அனுஷ்கா!

இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு பிவிபி., சினிமாவுடன் மீண்டும் ஆர்யாவும், அனுஷ்காவும் இணைந்துள்ள படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழில், இஞ்சி இடுப்பழகி என்றும், தெலுங்கில் சைஸ் ஜீரோ என்றும் பெயர் வைத்துள்ளனர்.

பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே.எஸ்.பிரகாஷ் இப்படத்தை இயக்குகிறார். நீரவ் ஷா ஔிப்பதிவு செய்கிறார், மதன்கார்கி பாடல்கள் எழுதி, மரகதமணி இசையமைக்கிறார்.

இப்படத்தின் தமிழ் பட பூஜை சென்னையில் விமரிசையாக நடந்தது. இதில் பங்கேற்ற அனுஷ்கா பேசும்போது, இஞ்சி இடுப்பழகி ஒரு ரொமான்டிக் படம். இப்படத்தில் ஸ்வீட்டி எனும் கேரக்டரில் நான் நடிக்கிறேன்.

பொதுவாக பொண்ணுங்க அழகாக இருக்கணும், ஒல்லியாக இருக்கணும் என்று எதிர்பார்ப்பார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி சந்தோஷம் தான் அழகு என்று சொல்கிற மாதிரியான படம் தான் இது.

ருத்ரமாதேவி, பாகுபலி என தொடர்ந்து சரித்திர படங்களிலும், சண்டை படங்களிலும் நடித்து வந்தேன். அந்த வகையில் இந்த இஞ்சி இடுப்பழகி, எனக்கு ரிலாக்ஸ் தருகிற மாதிரியான படம் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
‘இஞ்சி இடுப்பழகி’ இசை அக்டோபர் 29 முதல்
உடல்வாகு விவாதம் இணையதளத்தில் நடத்தும் படக்குழுவினர்!
20 கிலோ கூடிய அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions