'அருந்ததி' அனுஷ்கா தோற்றத்தில் லட்சுமி ராய்

Bookmark and Share

'அருந்ததி' அனுஷ்கா தோற்றத்தில் லட்சுமி ராய்

'தம்பி வெட்டோத்தி சுந்தரம், கன்னியும் காளையும் செம காதல்' ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமிராய் மற்றும் பலர் நடிக்க 'சௌகார்பேட்டை' என்ற படம் சில நாட்களுக்கு முன் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்காக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மிரட்டலாக இருந்தாலும் படத்தில் நட்சத்திரங்களின் தோற்றம் இதற்கு முந்தைய சில படங்களை ஞாபகப்படுத்துவதாக உள்ளது.

அதிலும் லட்சுமி ராயின் புகைப்படம் அப்படியே 'அருந்ததி' படத்தில் அனுஷ்கா இருந்ததைப்  போன்றே உள்ளது. சமீப காலமாக பேய், மர்மம், திகில் ஆகியவை கலந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெறுவதைத் தொடர்ந்து தமிழில் இப்படிப்பட்ட படங்கள் அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன, பல படங்கள் தயாராகி வருகின்றன.

அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடிக்கும். இருந்தாலும் ஒரே மாதிரி பார்த்துப் பழகிய நடிகர் ஸ்ரீகாந்தை ஒரு புதுத்தோற்றத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியிருப்பதும், லட்சுமி ராய்க்கும் ஒரு புதுத் தோற்றத்தைக் கொடுத்திருப்பதும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தமிழில் விட்டு விட்டு படங்களில் நடிக்கும் லட்சுமி ராய் தற்போது இந்தப் படம், 'பெங்களூரு டேய்ஸ்' தமிழ் ரீமேக் என மீண்டும் பிஸியாகிவிட்டார்.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions