அனுஷ்காவுடன் நிச்சயதார்தம் பற்றி மனம் திறந்த பிரபாஸ் - என்ன சொல்றார் பாருங்க.!

Bookmark and Share

அனுஷ்காவுடன் நிச்சயதார்தம் பற்றி மனம் திறந்த பிரபாஸ் - என்ன சொல்றார் பாருங்க.!

பாகுபலி பிரபாஸ் அனுஷ்கா என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது கிசுகிசு தான், இவர்கள் முதல் முதலாக ஜோடி சேரும் போது ஆரம்பித்த கிசுகிசு இன்று வரை முடியவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் சில தினங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் டிசம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் தீயாக கிளம்பியது.

இது பற்றி பிரபாஸ் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். எங்களின் குடும்பமே நண்பர்கள் தான், 9 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறோம். இது போன்ற செய்திகள் கிளம்பும் போதெல்லாம் நமக்குள் எதாவது இருக்கிறதா? என இருவருமே கேட்டு கொள்வோம்.

ஆனால் இதுவரை எங்களுக்கு காதல் வந்ததில்லை, நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகிறோம். இது போன்ற வதந்திகள் முதலில் மனதை காயப்படுத்தின. தற்போது பழகி விட்டது என கூறியுள்ளார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions