பிரபாசுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயம்: அனுஷ்காவுடனான காதல் பரபரப்பு

Bookmark and Share

பிரபாசுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயம்: அனுஷ்காவுடனான காதல் பரபரப்பு

சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் நடிகை அனுஷ்காவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் இணைந்து நடித்து இருந்தனர். 

இதன் இரண்டாம் பாகத்திலும் ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. அடிக்கடி ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறினர்.

அனுஷ்காவும், பிரபாசுடன் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிவந்தார். அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. எனவே அவருடைய பெற்றோர் விரைவில் திருமணத்தை முடித்து விட அவசரம் காட்டுகின்றனர் என்றும் பிரபாசை மணக்க அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டனர் என்றும் தெலுங்கு பட உலகில் பேச்சு அடிபட்டது. பாகுபலி இரண்டாம் பாகம் படம் வெளியானதும் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தற்போது இவர்கள் காதல் திடீர் என முறிந்து விட்டதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. அனுஷ்காவை மணப்பது பிரபாஸ் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றும், அவருக்கு சொந்தத்தில் வேறு பெண்ணை பார்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரபாசும் பெற்றோரை எதிர்க்க விரும்பாமல் அவர்கள் பார்த்த பெண்ணை மணக்க சம்மதித்து விட்டார் என்கின்றனர். இது அனுஷ்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மன அமைதிக்காக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வெளிநாடு சென்று விட்டார்.

அனுஷ்கா தரப்பில் அவரது மானேஜர் இந்த காதல் கிசுகிசுக்களை மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ‘அனுஷ்கா பற்றி அடிக்கடி வதந்திகள் வருகின்றன. ஏற்கனவே தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் செய்தி வந்தது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions