ரஜினியிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: அனுஷ்கா

Bookmark and Share

 ரஜினியிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் அனுஷ்கா, தனது நடிப்பு அனுபவம் பற்றி கூறிய அவர்...

‘‘எனக்கு பிடித்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறேன். ‘‘இஞ்சி இடுப்பழகி’’ படம் பெண்களுக்கு பிடிக்கும்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக முதலில் ‘போட்டோஷுட்’ எடுத்த போது பொருத்தமாக அமையவில்லை. மேக்கப்– ஆடை வடிவமைப்பால் சரி செய்யலாம் என்றனர். அதிக மேக்கப் ஆபத்தை விளைவிக்கலாம். உடல் எடையை அதிகாரித்தாலும் ஆபத்து வரும் என்றார்கள். என்றாலும், உடல் எடையை அதிகமாக்குவதுதான் சரி என்று முடிவு செய்தேன். 3 மாதங்களில் உடல் எடை 17 கிலோ கூடியது.

ஒல்லியோ, குண்டோ எதுவும் அழகுதான். உடல் தோற்றத்தைவிட மனதுதான் உண்மையான அழகு என்பதுதான் இந்த படத்தின் கதை.

நான் இணைந்து நடித்தவர்களில் ரஜினியிடம் நிறைய கற்றுக் கொண்டேன். சூப்பர் ஸ்டாராக இருந்தும் அவரது எளிமை மிகவும் பிடித்தது. அவரது நடிப்பும், பொது வாழ்க்கையும் மிகவும் கவர்ந்தது. சூர்யா யூனிட்டில் எல்லோரையும் மதிப்பார். விக்ரம் ஆலோசனை வழங்குவார்.

ஆர்யா, பிரபாஸ் உள்பட எல்லோரும் எனது நண்பர்கள். நான் உயரமாக இருப்பதால் சில வேடங்கள் வரவில்லை. என்றாலும் அதைப்பற்றி கவலைப்பட்டது இல்லை. வெற்றிப் படங்களில் நடிக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். என்றாலும் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஜெயிக்க வைப்பது ரசிகர்கள் கையில். நான் சினிமாவுக்கு வருவேன் என்றே நினைக்க வில்லை. எல்லாம் கடவுள் விருப்பம்.

திரை உலகில் போட்டி தேவை. அப்போது தான் சிறந்த நடிப்பை வழங்க முடியும். ‘நம்பர்–1’ போட்டியில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தாலே போதும். எனக்கு வரிசையாக நல்ல படங்கள் அமைந்தது சந்தோஷமான விஷயம்.

அடுத்து எனது நடிப்பில் பாகுபலி–2, சிங்கம்–3 படங்கள் வருகின்றன. பாகுபலி படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. இது உலக அளவில் கொண்டு செல்லும் படமாக இருக்கும்’’ என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions