நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்

Bookmark and Share

நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்

சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றியடைந்த ‘பாகுபலி’ என்ற சரித்திர படத்தில் அனுஷ்கா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர, ‘ருத்ரமாதேவி’ என்ற சரித்திர படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சரித்திர படங்களில் நடிப்பது குறித்து அனுஷ்கா கூறியதாவது:– மகாராணி பாத்திரங்கள் எனக்கு மிகவும் பொருத்தமாக அமைந்து விட்டது. மகாராணி கதாபாத்திரம் என்றலே ரசிகர்களுக்கு அனுஷ்கா என்று தான் நினைவுக்கு வரும். நீ ஒரு சினிமா மகாராணி என அனைவரும் என்னை பாராட்டும் போது பெருமையாக இருக்கிறது.

அருந்ததியை அடுத்து பாகுபலி–2 வர இருக்கும் ருத்ரமாதேவி இதில் எல்லாம் நான் மகாராணியாக நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரங்களில் என்னை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. இதுபோன்ற படங்களில் என்னால் நடிக்க முடியும் என்பதற்கு அருந்ததி ஒரு நல்ல பதில்.

இது போன்ற கதாபாத்திரங்களை உருவாக்க இயக்குனர்களும் தயாரிக்க தயாரிப்பார்களும் தயாராக இருந்தால் நான் தொடர்ந்து நடிக்க தயார் என்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions