மனதில் பட்டதை ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவேன்- அனுஷ்கா சர்மா

Bookmark and Share

மனதில் பட்டதை ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவேன்- அனுஷ்கா சர்மா

பாலிவுட் நடிகைஅனுஷ்கா சர்மா, தனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார் அதில், “புத்தகம் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை புத்தக பூச்சி என்பார்கள். இறால் மீன், சிக்கன், வெண்ணெய் பிடிக்கும். ஆனால் இப்போது மாமிச உணவு சாப்பிடுவதை முழுமையாக நிறுத்தி விட்டேன். சைவ உணவுக்கு மாறி இருக்கிறேன். 

கறுப்பு நிறம் எனக்குப் பிடிக்கும் கறுப்பு உடைகளை விரும்பி அணிவேன். தனியாக வீட்டில் அமர்ந்து இருப்பது பிடிக்கும். தினமும் யோகா செய்வேன். நடனம் ஆடுவதும் மிகவும் பிடிக்கும். மனதில் பட்டதை ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவேன். 

ஷுக்கள் மீது எனக்கு ஆசை அதிகம். ஏராளமான ஷுக்களை வாங்கி வைத்திருக்கிறேன். எளிமையான ஆடை அணிவதுதான் பிடிக்கும். புகைபிடிப்பது பிடிக்காது. புகை பிடிப்பவர்களையும் பிடிக்காது. பணம் தான் முக்கியம் என்று அதை நேசிப்பவர்களை பிடிக்காது. தகுதி பார்த்து நட்பு வைப்பவர்களை பிடிக்காது. தரம் பார்த்து பழகுகிறவர்களையும் சுத்தமாக பிடிக்காது. 

எதற்கெடுத்தாலும் அவசரப்படுவது பிடிக்காது. இரவில் அதிக நேரம் சூட்டிங் நடத்துவது பிடிக்காது. வீராட் கோலியுடன் காதல் திருமணம் என்று கேள்வி கேட்பவர்களை பிடிக்காது. மனதில் ஒன்றை வைத்து வெளியே வேரொன்றை சொல்ல பிடிக்காது. அப்படி சொல்பவர்களையும் பிடிக்காது. 

சாக்லெட், காபி, நெய் உணவு பிடிக்காது. பெண்கள் மென்மையானவர்கள் குறிப்பிட்ட பணிகளைத்தான் செய்ய முடியும் என்று சொல்பவர்களை பிடிக்காது. எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பவர்களை பிடிக்காது” என்றார்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions