அனுஷ்கா சர்மா தயாரித்து நடித்துள்ள என்எச் 10: 8 நாட்களில் 21 கோடி வசூல்

Bookmark and Share

அனுஷ்கா சர்மா தயாரித்து நடித்துள்ள என்எச் 10: 8 நாட்களில் 21 கோடி வசூல்

அனுஷ்கா சர்மாவை காதலி என்று முதன்முறையாக விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டுவதற்கு காரணமான இருந்த திரைப்படம் என்எச் 10.

பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா முதன் முதலாக தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், இதுவரை பாக்ஸ் ஆபீசில் 21.7 கோடி வசூல் செய்துள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் மார்ச் 13-ம் தேதி அன்று வெளியான இந்தப் படத்தைப் பார்த்த கோலி ‘என்எச் 10 படம் பார்த்து அசந்துவிட்டேன். புத்திசாலித்தனமான படம் மட்டுமல்ல எனது காதலியின் அற்புதமான நடிப்பும் கவர்ந்தது.‘ என்று ட்விட்டரில் தெரிவித்தார்.

கவுரவக் கொலைகள் மற்றும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்த, இந்தப்படம் விமர்சகர்களின் பாராட்டையும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்று, வெளியான மூன்றே நாட்களில் 13 கோடி வசூல் செய்தது. நேற்று முன்தினம் வரை 21.7 கோடி வசூல் செய்துள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்து புதிய திரைப்படங்கள் எதுவும் வராத நிலையில், டெல்லி, உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் மட்டும் 30 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions