அனுஷ்கா ஷர்மாவை திட்டித் தீர்த்த ரசிகர்கள்

Bookmark and Share

அனுஷ்கா ஷர்மாவை திட்டித் தீர்த்த ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணி முக்கியமான அரையிறுதிப் போட்டியில் மோசமாக விளையாடி தோல்வியுற்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமலே போனது.

லீக் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, காலிறுதிப் போட்டியிலும் வென்ற இந்திய அணி, இப்படி அரையிறுதியில் தோற்ற நிலையைப் பார்த்து சமூக வலைத்தள ரசிகர்கள் நேற்று அதிகமாகவே கிண்டலடித்தனர்.

அவர்கள் பார்வை முழுவதும் சிட்னிக்கு மேட்சைப் பார்க்கச் சென்ற பாலிவுட்டின் முன்னணி நடிகையும், விராட் கோலியின் காதலி என்று சொல்லப்படுபவருமான அனுஷ்கா ஷர்மா மீதே திரும்பியது.

விராட் கோலி ஒரே ஒரு ரன்னில் அவுட்டாகித் திரும்ப அனுஷ்கா ஷர்மா அங்கு சென்றதே காரணம் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை அடித்துத் தள்ளிவிட்டனர்.

அதிலும் ஒரு கமெண்ட் சமூக வலைத்தளங்களில் நேற்று அதிகமாக உலவியது. ஷிகர் தவான் அவுட்டானதும், ரோகித் ஷர்மாவுடன் இணைந்து விளையாட விராட் கோலி களத்திற்குச் சென்றிருந்தார். போன வேகத்தில் அவர் அவுட் ஆகித் திரும்பியதும் அந்த கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தியது.

“தோனி, விராட் கோலியிடம் நீ ஷர்மாவுடன் இணைந்து பொறுமையாக விளையாடு என்று சொன்னதை, விராட் கோலி, தோனி சொன்ன ஷர்மா, ரோகித் ஷர்மா என்று புரிந்து கொள்ளாமல், அனுஷ்கா ஷர்மா என்று நினைத்து சீக்கிரமே அவுட் ஆகி பெவிலியன் திரும்பிவிட்டார்,” என்ற கமெண்ட்டுதான் பரபரப்பாகச் சுற்றி வந்தது.  

தோனி, மேட்ச் முடிந்து அளித்த பேட்டியில் கண்கள் கலங்கிய நிலையில் இருந்ததை 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து தோனி ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையும் நேற்று மாலைக்குப் பிறகு பதிவு செய்திருந்தனர்.

'அரையிறுதிப் போட்டி அனுஷ்கா ஷர்மாவால போச்சி' என்பதுதான் நேற்றைய சமூக வலைத்தளங்களில் ஹைலைட். 

 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions