அனுஷ்கா படத்தில் கமல் பாடல்

Bookmark and Share

அனுஷ்கா படத்தில் கமல் பாடல்

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் இஞ்சி இடுப்பழகி படத்தில், தேவர் மகன் படத்தி்ல் இடம்பெற்றிருந்த "இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி" ரீமிக்ஸ் பாடல் இடம்பெற உள்ளது.'

1992ம் ஆண்டில் கமல்ஹாசனின் எழுத்து மற்றும் தயாரிப்பில் வெளியான தேவர் மகன் படத்துக்கு இளையராஜா இசையிலமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனபோதிலும், இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி"  அதையும் தாண்டி, பட்டிதொட்டிகளில் எல்லாம் ஒலித்து, தற்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  என்று பெயரிடப்பட்டுள்ளது. 

தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற பாடலின் முதல்வரியே, ஆர்யா மற்றும் அனுஷ்கா நடித்த படத்திற்கு இஞ்சி இடுப்பழகி என்று பெயராக வைத்துள்ளனர். 

இதுமட்டுமின்றி படத்தில் நாயகன், நாயகி, அப்பாடலை பார்ப்பதோடு மட்டுமல்லாது, அந்த பாடலின் காட்சியில் இருந்தவாறே, பாரம்பரிய உடையில், ஆர்யாவும், அனுஷ்காவும் இருப்பதுபோன்று காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாம்.

படத்தின் கதைக்கு ஏற்ப ஹீரோக்களே, தங்களது உடல் எடையை கூட்டி, குறைந்து வந்த நிலையில், முதல்முறையாக, ஹீரோயின் அனுஷ்கா படத்தின் கதைக்காக, தனது உடல் எடையை, ஒரே படத்திற்காக 20 கிலோ அதிகரித்ததோடு மட்டுமல்லாது, மீண்டும் உடல் எடையை குறைத்து  இப்படத்தில் புதுமை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் என்றால், விஜயசாந்தி பெயர்தான் நினைவிற்கு வரும். இனி அந்த பெயர், இஞ்சி இடுப்பழகி படத்தின் மூலம் அனுஷ்காவிற்கு கிடைக்கும் என்பது நிச்சயம்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions