காதலரை மணப்பேன் அனுஷ்கா தடாலடி

Bookmark and Share

காதலரை மணப்பேன் அனுஷ்கா தடாலடி

அனுஷ்காவின் 2 பெரிய படங்களான ருத்ரம்மாதேவி, பாஹுபலி படங்கள் திரைக்குவரவுள்ளன. ஆனாலும் அவ்வப்போது அவரது திருமணம் பற்றிய கிசுகிசு வந்த வண்ணம் உள்ளது.

வருடக்கணக்கில் திருமண பேச்சு தொடர்ந்துக்கொண்டிருந்தாலும் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ளாமல் தொடர்ச்சியாக புதுபடங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பாய்பிரண்டுடன் நெருக்கமாக இருப்பதுபோல் அனுஷ்காவின் வீடியோ படங்கள் இணைய தளங்களில் வெளியானது. அத்துடன் அவரது பெயரில் குளிப்பதுபோன்ற ஸ்டில்களும் வெளியாகின.

கேள்விப்படாத ஒன்றைபற்றி அனுஷ்கா கவலைப்படப் போவதில்லை என அவரது தரப்பில் பதில் வந்தது. இந்நிலையில் திருமணம் எப்போது என்று அனுஷ்காவிடம் கேட்டபோது, ‘திருமணம் பற்றி இப்போது சிந்திக்க நேரமில்லை.

ஏனென்றால் நான் நடிக்கும் சில பெரிய படங்களின் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. திருமணம் என்பது திட்டமிட்டு வருவதில்லை. ஆனால் சரியான நேரத்தில் வரும்.

என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி அல்லது நான் காதலிப்பவராக இருந்தாலும் சரி அவரை மணப்பேன்’ என்றார். தற்போது அனுஷ்கா டோலிவுட் இயக்குனர் கே.ராகவேந்திரராவ் மகன் பிரகாஷ் இயக்கும் ‘சைஸ் ஜீரோ’ படத்தில் நடித்து வருகிறார். 

 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions