ஆன்மிகத்தில் தற்போது ஈடுபாடு ஏற்பட்டுள்ளது: அனுஷ்கா பேட்டி

Bookmark and Share

ஆன்மிகத்தில் தற்போது ஈடுபாடு ஏற்பட்டுள்ளது: அனுஷ்கா பேட்டி

அனுஷ்கா ஓம் நமோ வெங்கடேசா என்ற பக்தி படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். திகில் மற்றும் அதிரடி படங்களில் நடித்து வந்த அனுஷ்காவுக்கு இது முதல் பக்தி படம் ஆகும்.

இதில் நாகார்ஜுனா ஏழு மலையானின் பக்தரான ஆதிராம்பாபா கதாபாத்திரத்திலும் அனுஷ்கா பக்தை வேடத்திலும் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலை அரங்காக அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்துகின்றனர். பக்தி படத்தில் நடிப்பது குறித்து அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

“ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க எனக்கு ஆர்வம் உண்டு. அதுமாதிரி கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்களில் ராணி வேடத்தில் நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்போது ஓம்நமோ வெங்கடேசா என்ற பக்தி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

இதன்மூலம் எனக்கு ஆன்மிகத்திலும் முன்பை விட அதிக ஈடுபாடு ஏற்பட்டு உள்ளது. பக்தி படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் பக்தி பரவசத்தை பார்க்க முடிகிறது. படப்பிடிப்புக்கு எல்லோரும் ஜிப்பா அணிந்து வருகிறார்கள். காலணி மற்றும் செல்போன்களை அரங்குக்கு வெளியிலேயே விட்டு விடுகின்றனர். நெற்றியில் நீளமாக நாமம் பூசி இருக்கிறார்கள். சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர்களுடன் கோவிந்தா என்ற பெயரை சேர்த்து அழைக்கிறார்கள். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions