3 மாதங்களில் 15 கிலோ எடையை குறைத்து விட்டேன்: அனுஷ்கா

Bookmark and Share

 3 மாதங்களில் 15 கிலோ எடையை குறைத்து விட்டேன்: அனுஷ்கா

'இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக அனுஷ்கா தனது எடையை சுமார் 20 கிலோ அதிகரித்தார். திரை உலகில் இது பெரிதாக பேசப்பட்டது.

'ருத்ரமாதேவி' படத்துக்காக பல்வேறு பயிற்சிகளைப் பெற்றதையும் அனுஷ்காக பெரிய விஷயமாக சொல்லி வந்தார். அடுத்து நடிப்பதால் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் கதை சாதாரணமானது தான். ஆனால் அதற்காக எனது உடல் எடையை அதிகரிக்க எடுத்த முயற்சிகள் மிகவும் அதிகம்.

இதற்காக அதிகமாக திட்டமிட்டு செயல்பட வேண்டியது இருந்தது. கஷ்டப்பட்டு எடையை 20 கிலோ அதிகமாக்கினேன். இப்போது மீண்டும் உடல் எடையை குறைக்க என்னை வருத்திக்கொள்கிறேன்.

முன்பு தினமும் ஒருமுறை உடற்பயிற்சி, யோக செய்து வந்தேன். இப்போது இரண்டு முறை உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறேன். நான் படும் சிரமத்துக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. இதுவரை 15 கிலோ எடையை குறைத்து விட்டேன். மீதம் உள்ள 5 கிலோவையும் இன்னும் ஒரு மாதத்திற்குள் குறைத்து விடுவேன்.

இந்த மாத இறுதியில் 'பாகுபலி–2' படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்குள், அதிகமான எடை முழுவதையும் குறைத்து விடமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஹீரோக்கள் கதையில் சேர்த்து நடிப்பது எளிது. அது பற்றி நான் பெரிதாக கவலைப்படுவது இல்லை.

ஆனால் என்னை முன்னிலைப்படுத்தி எடுக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் இருப்பேன். அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வேன். எதிர்பார்த்தது நடக்காவிட்டால் வேதனைப்படுவேன் என்றார். 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions