மன தூய்மையே அழகை தரும்: அனுஷ்கா பேட்டி

Bookmark and Share

மன தூய்மையே அழகை தரும்: அனுஷ்கா பேட்டி

அனுஷ்கா சிங்கம் படத்தின் 3-ம் பாகமாக தயாராகும் எஸ்-3 படத்தில் சூர்யா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.

அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. ஆனாலும் கதாநாயகி வாய்ப்புகள் குவிகின்றன. இதற்கு அவருடைய அழகே காரணம் என்கின்றனர்.

தனது அழகை கவனமாக அவர் பராமரித்து வருகிறார். அழகாக இருப்பது எப்படி? என்பது குறித்து அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘நான் அழகாக இருப்பதாக ரசிகர்கள், பட உலகினர் பாராட்டுகின்றனர். ஒரு படத்தில் குண்டு பெண் வேடத்தில் நடித்தேன். அந்த பருமன் கூட அழகுதான் என்றும் கூறினர். நான் அழகாக இருப்பதற்கான ரகசியம் என்ன என்று பலரும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள். அழகு என்பது அவரவர் கையில் இருக்கிறது.

சிலர் அந்த அழகை காப்பாற்றிக்கொள்கிறார்கள். வேறு சிலரோ அதை தொலைத்து விடுகிறார்கள். அழகு என்பது கடைகளில் கிடைக்கும் கிரீம்களை தடவுவதால் வருகிறது என்று நினைப்பவர்களும் உண்டு. அது தவறு. அழகு சருமம் சம்பந்தப்பட்டது என்று நினைத்து சருமத்தை மட்டும் மெருகேற்றினால் அழகு வராது. அது மனம் சம்பந்தப்பட்டது.

இரவு தூங்காமல் இருப்பது, எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பது, சாதாரண பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக்கொண்டு அதிலேயே குழம்பிப்போய் இருப்பது, போன்றவை அழகை கெடுத்து விடும். நான் எந்த பிரச்சினை வந்தாலும் வருத்தப்பட மாட்டேன். எல்லா விஷயங் களையும் ‘பாசிட்டிவ்’ ஆகவே பார்ப்பேன்.

மனதில் என்ன கவலை இருந்தாலும் முகத்தில் தெரியும். எனவே கவலைகளை நெருங்க விடமாட்டேன். மனதை எப்போதும் தூய்மையாக வைத்து இருப்பேன். மனம் அழகாக இருந்தால் வெளிப்புற தோற்றமும் அழகாகும். தினமும் யோகா பயிற்சிகள் செய்கிறேன். அதுவும் எனது அழகுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Post your comment

Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions