தோல்வியால் பாடம் கற்றேன்- அனுஷ்கா!

Bookmark and Share

தோல்வியால் பாடம் கற்றேன்- அனுஷ்கா!

நடிகை அனுஷ்காவின் சினிமாவா வாழ்க்கை தொடக்கத்டில் சிறப்பாக அமையவில்லை. அவர் நடித்த தமிழ்-தெலுங்கு படங்கள் எதிர்பார்த்த வசூல் ஈட்டவில்லை. இதனால் டைரக்டர்கள் அவரை ஒதுக்கினார்கள். ஆனால், 2009-ல் வெளியான ‘அருந்ததி’ படம் அனுஷ்காவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு அவருக்கு படங்கள் குவிந்தன. தற்போது அனுஷ்கா முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகிவிட்டார். தற்போது அவர் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களாகிவிட்டது.

இந்த 10 வருட சினிமா அனுபவங்கள் பற்றி அனுஷ்கா அளித்த பேட்டி, “ நான் சினிமாவில் 10 வருடங்களாக நடிக்கிறேன். இந்த காலகட்டத்தில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. வெற்றி-தோல்விகளை சந்தித்தேன். தோல்வி படங்கள் மூலம் நிறைய பாடங்களை கற்றேன். வெற்றியில் சந்தோஷப்படுகிறோம்.

தோல்வியில் துவண்டு போகிறோம். அப்படி இருக்கக் கூடாது. வெற்றி-தோல்வியை ஒன்றாக பார்க்கும் பக்குவம் வரவேண்டும். வெற்றி மரியாதைக்கு உரியது. 

தோல்வி மதிப்புக்கு உரியது. தோல்வி எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது. வெற்றிக்கு அவைதான் ஆதாரமாகவும் இருக்கின்றன. என் வாழ்க்கையில் நடந்த தோல்விகளை மட்டும் மறக்கவே மாட்டேன்.

எப்போதும் ஞாபகம் வைத்து இருப்பேன். அவை மீண்டும் தவறுகள் நடக்காமல் என்னை எச்சரிக்கையாக செயல்படவைக்கின்றன”. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions