வீட்டு ஞாபகத்தில் அனுஷ்கா ஏக்கம்

Bookmark and Share

வீட்டு ஞாபகத்தில் அனுஷ்கா ஏக்கம்

கடந்த 2 வருடமாக தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார் அனுஷ்கா. குறிப்பாக பாஹுபலி, ருத்ரம்மாதேவி படங்களில் நடிப்பதற்காக ஒன்றரை வருடத்துக்கும் மேல் வீட்டை மறந்து வெளியூர் பயணம், ஷூட்டிங் ஸ்பாட் என பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.

இதனால் அவர் வீட்டு ஞாபகத்தில் சோர்வடைந்தார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது தனது நேரத்தை குடும்பத்தினருக்காக ஒதுக்கி இருக்கிறாராம்.கடந்த ஞாயிறன்று செல்போன் முதல் வெளிவுலக தொடர்பை துண்டித்துவிட்டு வீட்டுக்குள் முடங்கினார்.

காலையில் லேட்டாக எழுந்தவர் பின்னர் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்தார். பிறகு அவர்களுடன் சிறுவயதில் விளையாடியது போல் விளையாட ஆசையாக இருப்பதாக கூற அவர்களும் ஓ.கே சொன்னார்கள்.

கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்ற மூன்று குரங்கு பொம்மை ஸ்டைலில் தனது வீட்டாருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தார்.

பிறகு தனது ஆனந்த விளையாட்டை இணைய தள பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘சைஸ் ஜீரோ’ படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. 

 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions