நான் ரெடி தான், ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டாமா?: அனுஷ்கா

Bookmark and Share

நான் ரெடி தான், ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டாமா?: அனுஷ்கா

அனுஷ்கா திருமணத்திற்கு தயாராக உள்ளாராம். ஆனால் மாப்பிள்ளை இதுவரை முடிவு செய்யப்படவில்லையாம்.யோகா டீச்சரான அனுஷ்கா சூப்பர் தெலுங்கு படம் மூலம் நடிகையானார். 10 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

35 வயதாகும் அவருக்கும், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் என்று செய்திகள் வெளியாகின.இது குறித்து அனுஷ்கா கூறுகையில்,எனக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் கேட்கிறார்கள். இந்நிலையில் எனக்கும், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் என வதந்தி பரவியுள்ளது.

நான் திருமணத்திற்கு தயார். ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டாமா? நான் தற்போது படங்களில் படுபிசியாக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாக பார்த்து நடிக்கிறேன்.பாகுபலி, ருத்ரமா தேவி படங்கள் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தன.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டினேன். இந்த ஆண்டு என் நடிப்பில் எந்த படமும் ரிலீஸாகவில்லை.அடுத்த ஆண்டு பாகுபலி 2 படம் வெளியாக உள்ளது. என் கதாபாத்திரமான தேவசேனா ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஓம்நமோ வெங்கடேசாய படத்தில் நான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions