யோகாவுக்கு மாறும் கதாநாயகிகள்

Bookmark and Share

யோகாவுக்கு மாறும் கதாநாயகிகள்

திரையுலகில் யோகா பிரபலமாகியுள்ளது. கதாநாயகிகள் பலர் யோகா பயிற்சிக்கு மாறி வருகிறார்கள். நடிகர், நடிகைகளுக்கு உடம்பே சொத்து. ஒவ்வொருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நிறைய மெனக்கெடுகிறார்கள். பல மணி நேரம் ஜிம்மில் முடங்கி கடும் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள்.

இந்த உடற்பயிற்சியால் தேகத்தில் வெளிப்புறம் மெருகேறுகிறது. ஆனால் உள் உறுப்புகள் இயக்கம் சமன் இன்றி இருக்கின்றன. அவற்றை சீராக்குவதற்கு யோகாதான் ஒரே வழி என்பதை தற்போது அறிந்துள்ளனர். மூச்சுப் பயிற்சி என பிரணாயாமம் மற்றும் பல்வேறு யோகாக்களால் மனதையும் உடம்பையும் எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள முடியும் என்று உணர்ந்துள்ளார்கள்.

இதையடுத்து கதாநாயகிகள் பலர் யோகா பயிற்சியில் ஈடுபட துவங்கியுள்ளனர். தமிழ், தெலுங்கு படஉலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா தினமும் தவறாது யோகா பயிற்சி செய்கிறார். சக நடிகர், நடிகைகளுக்கும் யோகாவை கற்றுக் கொடுக்கிறார். அனுஷ்கா யோகா ஆசிரியை பயிற்சி பெற்றவர்.

ஹன்சிகாவும் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். வீட்டில் தரையில் பாயை விரித்து பத்மாசனத்தில் சிறிது நேரம் அமர்ந்து பிரணாயாமம் செய்கிறார். அதன்பிறகு உடலை வளைத்தும், நெளித்தும் யோகாசனங்கள் செய்கிறார். படப்பிடிப்புகளுக்காக வெளியூர் சென்று ஓட்டல்களில் தங்கும்போது ஓட்டல் அறையிலேயே யோகா செய்கிறார்.

நடிகை இலியானாவும் தினமும் யோகா பயிற்சி செய்து உடம்பை ஒல்லியாக வைத்துள்ளார். தமன்னாவும் யோகாவில் ஈடுபடுகிறார். இளம் கதாநாயகிகளும் யோகாவுக்கு மாறி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சிகள் அவர்களை மேலும் தீவிரமாக ஈடுபட வைத்துள்ளது. இதுபோல் கதாநாயகர்களும் யோகா பயிற்சியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions