இரண்டே இரண்டு காரியம் செய்து சிங்கத்தை சாச்சுப்புட்ட அனுஷ்கா

Bookmark and Share

இரண்டே இரண்டு காரியம் செய்து சிங்கத்தை சாச்சுப்புட்ட அனுஷ்கா

நடிகை அனுஷ்கா ஒரு ஸ்வீட்டி என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படம் மூலம் முதன்முதலாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார் அனுஷ்கா. அதன் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து சிங்கம் 2 படத்தில் நடித்தார். தற்போது எஸ் 3 படத்திலும் அவர்கள் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் அனுஷ்கா பற்றி சூர்யா கூறுகையில், அனுஷ்கா நிஜ வாழ்க்கையில் ஒரு ஸ்வீட்டி. (அனுஷ்காவின் இயற்பெயர் ஸ்வீட்டி என்பது குறிப்பிடத்தக்கது.) அவரை நான் முதன்முதலாக பார்த்தபோது இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.சிங்கம் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய தினம் எனக்கு திருமண நாள்.

அனுஷ்காவை அன்று தான் முதன்முதலாக பார்த்தேன். அவர் என்னவென்றால் ஒரு போர்டில் ஜோ மற்றும் என்னுடைய புகைப்படங்களை ஒட்டி படக்குழுவினரிடம் கையெழுத்து வாங்கி அதை கொடுத்து வாழ்த்தினார்.

சிங்கம் 3 படப்பிடிப்பின்போது டிரைவர் ஒருவர் தனது குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதை அறிந்த அனுஷ்கா அவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார் என்றார் சூர்யா.சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சூர்யா தனது உடல் எடையை குறைத்துள்ளார்.


Post your comment





Related News
அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?
பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?
அனுஷ்காவால் அலறும் மற்ற நாயகிகள்- ஏன் தெரியுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா
அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா?
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி
திருமணத்தை தாண்டி அனுஷ்காவிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்- இது நடக்குமா?
பிரபாஸிற்காக அனுஷ்கா எடுக்கும் அதிரடி முடிவு- இனி யாரும் கேட்க முடியாது
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions