அனுஷ்கா முன்பு தமன்னாவை பாராட்டிய ராஜமெளலி!

Bookmark and Share

அனுஷ்கா முன்பு தமன்னாவை பாராட்டிய ராஜமெளலி!

நான் ஈ ராஜமெளலி கடந்த 3 ஆண்டுகளாக இயக்கி வந்த மெகா படம் பாகுபலி. சரித்திர கதையில் தயாராகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து 150 நாட்களுக்கு பிறகுதான் அவந்திகா என்ற வேடத்துக்காக தமன்னா கமிட்டானார்.

சின்ன ரோல் என்றாலும் பெரிய படத்தில் நடித்த பெருமை கிடைக்குமே என்று அப்படத்தில் ஒப்பந்தமான தமன்னாவின் கதாபாத்திரத்தை பின்னர் கிட்டத்தட்ட அனுஷ்காவுக்கு இணையான வேடமாக மாற்றினார் டைரக்டர்.

குறிப்பாக, பட நாயகன் பிரபாசுடன்தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறதாம். அப்படத்தில் அவர் இளவரசியாக நடித்துள்ள புகைப்படங்களைத்தான் பப்ளிசிட்டி சுற்றில் அதிகமாக பயன்படுத்தியும் வருகிறார்கள்.

இதனால் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் இருக்கிறார் தமன்னா. இந்த நிலையில், அப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது, படத்தில் நடித்தவர்களைப்பற்றி அப்படத்தின் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி சொல்லிக்கொண்டு வந்தபோது, தமன்னாவை ரொம்ப பெருமையாக பேசினார்.

அதாவது, எனது அனுபவத்தில் தமன்னா மாதிரி ஒரு சின்சியரான ஆர்ட்டிஸ்டை நான் பார்த்ததில்லை என்றார். அதுவும் அனுஷ்காவை எதிரே வைத்துக்கொண்டே அவர் இப்படி புகழ்ந்ததால் அந்த தருணத்தில் மிதமிஞ்சிய சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போயிருந்தார் தமன்னா.


Post your comment





Related News
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions