தமன்னாவை கட்டித்தழுவிய அனுஷ்கா!

Bookmark and Share

தமன்னாவை கட்டித்தழுவிய அனுஷ்கா!

தமிழில் லிங்கா, என்னை அறிந்தால் படங்களுக்குப்பிறகு இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. அதேபோல் தெலுங்கில் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி படங்களை முடித்து விட்டு, இஞ்சி இடுப்பழகி படத்தின் தெலுங்கு பதிப்பான சைஸ் ஜீரோ என்ற படத்திலும் நடிக்கிறார்.

இதையடுத்து எந்த புதிய படமும் அவருக்கு கமிட்டாகவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ருத்ரம்மாதேவி, பாகுபலி சரித்திர படங்களுக்காக கடின உழைப்பில் ஈடுபட்டிருந்த அவர், இப்போது ரிலாக்சாக காணப்படுகிறார்.

அதோடு, தனது நட்பு வட்டார சினிமா நடிகர் நடிகைகள் யாரைக்கண்டாலும் ஓடிச்சென்று கட்டித்தழுவிக்கொண்டு நட்பை புதுப்பித்து வருகிறார் அனுஷ்கா. அந்த வகையில், நேற்று முன்தினம் சென்னையில் பாகுபலி படத்தின் ட்ரெய்லர் விழா நடந்தபோது, பல நடிகர் நடிகைகளை அவர்களின் இருக்கைக்கே சென்று கட்டித்தழுவி அன்பை பகிர்ந்து கொண்ட அனுஷ்கா, ஒரு கட்டத்தில் தமன்னாவைப்பார்த்தவர், அவர் அருகே சென்று கட்டித்தழுவிக்கொண்டார்.

சினிமாவில் எதிரும் புதிருமான நடிகைகளாக கருதப்பட்டு வரும் இந்த இரண்டு முன்னணி நடிகைகளும் கட்டிப்பிடித்துக்கொண்ட இந்த சம்பவத்தை சுற்றியிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions