அனுஷ்கா, திரிஷாவுக்கு ஹீரோவாக நடிக்கவேண்டும்: பவர் ஸ்டார்

Bookmark and Share

அனுஷ்கா, திரிஷாவுக்கு ஹீரோவாக நடிக்கவேண்டும்: பவர் ஸ்டார்

மிர்ச்சி சிவா நடிப்பில் சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ கேரக்டரில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம் பவர் ஸ்டார்.

வருகிற ஜூலை-7ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் பவர் ஸ்டார் படம் குறித்தும், தனது எதிர்கால லட்சியம் குறித்தும் விலாவாரியாக பகிர்ந்துகொண்டார். அதுகுறித்து பார்ப்போம்...

ஆரம்பகாலத்துல இருந்து இப்ப வரைக்கும் ரஜினி சாருக்கு நான்தான் போட்டி. இந்த படத்தில சூப்பர் ஸ்டார் கேரக்டர்ல நடிக்கிறதால எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் பேசவில்லை. கதைக்கு என்ன டயலாக் தேவைப்பட்டுச்சோ, டைரக்டர் என்ன டயலாக் கொடுத்தாரோ அதை மட்டும் தான் பேசியிருக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசலை.

காமெடிப் படம் என்பதால் ஸ்டைல்னு தனியாக எதுவும் செய்யவில்லை. ஆனா எக்கச்சக்க ‘பஞ்ச்’ இருக்கு. ரொம்ப நாளா இல்லாம இருந்த பஞ்ச் இதுல நிறைய வந்திருக்கு. இந்த படம் வெளியாச்சுன்னா இனி குழந்தைகள் பேசுறது எல்லாம் நம்ம பஞ்ச்சாத்தான் இருக்கும்னா பாத்துக்குங்க.

என்னோட லட்சியம் என்று பார்த்தால் அனுஷ்கா கூடவும் த்ரிஷா கூடவும் ஹீரோவா நடிக்கனுங்கிறதுதான். இந்த படத்தோட தயாரிப்பாளர் கோபிகூட என்னோட அடுத்த படத்துக்காக அனுஷ்கா கிட்டேயும் த்ரிஷா கிட்டேயும் பேசிக்கிட்டு இருக்கிறார். அவங்க கிடைக்கா விட்டாலும் கூட, அவங்க பேர்ல வேற யாராவது இருந்தால் அவர்களை கமிட் பண்ணுங்கன்னு சொல்லி வச்சிருக்கேன் என்றார்.


Post your comment





Related News
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!
அனுஷ்கா, திரிஷா யார் பெஸ்ட்? கவுதம் மேனன் பதில்
உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என்னை அறிந்தால்
தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்!
அஜித் படத்தின் புரமோஷனுக்கு வர மறுத்த அனுஷ்கா, த்ரிஷா...!
என்னை அறிந்தால் படத்தின் வியாபாரம் தொடங்கியது!
என்னை அறிந்தால் தலைப்புக்கு காரணம் என்ன?கௌதம் மேனன் விளக்கம்
த்ரிஷாவுக்குப் போட்டி தரும் அனுஷ்கா...!
பொங்கலுக்கு வருகிறார் அஜீத்
மீண்டும் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலுக்கு மாறும் அஜீத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions