அழகு என்பது ஆரோக்கியத்தில் ஆனந்தத்திலும் இருக்கிறது : அனுஷ்கா பேட்டி

Bookmark and Share

அழகு என்பது ஆரோக்கியத்தில் ஆனந்தத்திலும் இருக்கிறது : அனுஷ்கா பேட்டி

நடிகை அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான அவர் 10 ஆண்டுகளை தாண்டியும் முன்னணி கதாநாயகர்களுடனும் இளம் நடிகர்கள் படங்களிலும் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அழகான காதலி, குண்டு பெண், வாள் வீசி சண்டையிடும் ராணி என்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.

சூர்யா ஜோடியாக ‘சிங்கம்’ படத்தின் 3-ம் பாகமாக தயாராகும் ‘எஸ்.3’ படத்திலும் தமிழ், தெலுங்கில் உருவாகும் பாகுபலி இரண்டாம் பாகத்திலும் பாக்மதி என்ற சரித்திர படத்திலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். ஓம்நமோ வெங்கடேசா என்ற பக்தி படத்திலும் நடிக்கிறார். மூத்த நடிகையான பிறகும் அழகால் வசீகரிக்கிறார்.

அனுஷ்காவிடம் அழகு என்று எதை கருதுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“அழகை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். சிலர் அழகு என்று ரசிக்கும் விஷயங்கள் மற்றவர்களுக்கு பிடிப்பது இல்லை. என்னை பொருத்தவரை அழகு என்பது ஆரோக்கியத்திலும் ஆனந்தத்திலும் இருக்கிறது.

உடல் தோற்றத்தில் இல்லை. நமது உடலுக்கும் மனதுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். நிறைய பேர் அழகுக்காக உடலில் கிரீம் தடவுகிறார்கள்.

உடல் ஆரோக்கியமில்லாமல் இருந்து எவ்வளவு கிரீம் தடவினாலும் அழகு வந்து விடாது. எப்போதும் மனதை மகிழ்ச்சியாகவும் உடலை ஆரோக்கியத்துடனும் வைத்து இருப்பவர்களிடமே அழகு தங்கி இருக்கும்.

சிரிப்பும் அழகில் ஒரு பகுதிதான். கண்களும் அழகுதான். நான் ஒருவரை சந்திக்கும்போது முதலில் அவரது கண்களைத்தான் பார்ப்பேன். அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

எனக்கு என்னிடத்தில் பிடிக்காத விஷயங்கள் எதுவும் இல்லை. நான் அழகாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அது எனது ஆரோக்கியத்தில் இருந்து வந்தது. என்னை விட அழகான பெண்களை தினமும் பார்க்கிறேன்.

அவர்களுக்கு என்னை மாதிரி நடிகையாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் நடிகையானது அதிர்ஷ்டம். இந்த வாய்ப்பை தந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions